குத்துமதிப்பா அதை மாடுனுகூட ஏத்துக்கலாம்.. ஆனா, கன்னுகுட்டியை நினைச்சாதான் கண்ணு கலங்குது!

 சென்னை: மாட்டுப் பொங்கல் வந்து விட்டாலே நம் மக்களுக்கு தனி ஒரு குஷி வந்து விடும். தங்களுக்குள் ஒளித்து வைத்துள்ள ஓவியத் திறமையையெல்லாம், வீட்டு வாசலில் மாடாக வரைந்து வெளிப்படுத்தி விடுவார்கள். அப்படிப்பட்ட அழகான கோலங்களை வைத்து தான் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.

பொங்கல் என்றாலே நம் மக்களுக்கு கோலம் என்பது மறக்க முடியாத ஒரு சம்பிரதாயம். அதிலும் தைப்பொங்கல் அன்று வீட்டு வாசலில் பொங்கல் பானையும், கரும்பும் கோலமாக வரைவதோடு, அடுத்த நாளான மாட்டுப் பொங்கல் அன்று மாட்டை வைத்தும் தங்களது கற்பனைக் குதிரைகளை கோலங்களாக அவிழ்த்து விட்டு விடுவார்கள்.

ஆனால், அவற்றில் பல மாடு கோலங்களில் மாடுகள் அலங்கோலமாக இருக்கும். அவற்றை மாடு எனச் சொன்னால், நிஜ மாடுகூட நம்பாது. ஆனாலும் அவர்களது மன தைரியத்தைப் பாராட்டி சோப்பு டப்பா தராவிட்டாலும் பரவாயில்லை, நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்க்காமலாவது இருக்கலாம் இல்லையா?

என்ன செய்வது மாட்டுப் பொங்கல் கோலங்களைக் கலாய்த்தால்தான் அவர்களுக்கு பொங்கல் கொண்டாட்டங்களே முழுமை அடையும் போல. அதனால்தான், ஒவ்வொரு தீபாவளிக்கும் மார்க்கெட்டில் என்ன புது டிரஸ் டிரெண்ட்டிங்கில் உள்ளது எனத் தேடுவது போல, இந்த முறை எந்த மாடு வித்தியாசமாக உள்ளது என கோலங்களை மீம்ஸ் போட்டு ஆராயத் தொடங்கி விடுகின்றனர். இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக.












கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.