நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் உத்தரவு .கச்சபேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்.. காஞ்சிபுரத்தில்

  நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் உத்தரவு .கச்சபேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்.. காஞ்சிபுரத்தில்.

காஞ்சிபுரம்: கச்சபேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளைய தினம் காஞ்சிபுரத்தில் நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவு பிறப்பித்துள்ளார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்ததால் அப்பகுதி பள்ளிகளுக்கு விடுப்பு விடப்பட்டுள்ளது.

நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் உத்தரவு .கச்சபேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்.. காஞ்சிபுரத்தில்

தமிழ்நாட்டின் கோயில் நகரம் காஞ்சிபுரம். திருவாரூரில் பிறக்க முக்தி,காஞ்சியில் வாழ முக்தி,காசியில் இறக்க முக்தி,திருவண்ணாமலையை நினைக்க முக்தி என்ற வரிகள் மூலம் காஞ்சியின் சிறப்பை அறிய முடிகிறது.

தென்னாட்டு புனித தலங்களில் பிரதானமானது காஞ்சிபுரம். சைவர், வைணவர், சமணர் மற்றும் பெளத்தர் போற்றும் ஒரே புனித தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு 1008 சிவ தலங்களும், 108 வைணவ தலங்களும் இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பல தொன்மையான, பாடல் பெற்ற கோயில்கள் 108 சிவ ஆலயங்கள் காஞ்சிபுரம் நகரத்திலும் நகரத்தைச் சுற்றியும் காணப்படுகின்றன.

கர்ச்சபேஸ்வரர் கோயில் சிவபெருமான் கோவிலாக இருந்தாலும், இது விஷ்ணுவுடன் தொடர்புடையது. வைணவம் மற்றும் சைவ பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாக்கி வாசுகி நாகத்தை கயிராக்கி கடலைக் கடைந்த போது மந்தார மலை நிலையற்றதாக இருந்தது. விஷ்ணு தன்னை ஆமையாக மாற்றிக் கொண்டு கடலில் உள்ள மந்தார மலையின் அடியில் சென்று அதை நிலைநிறுத்தினார். இறுதியாக அவர் தேவர்களுக்கு அமிர்தத்தைப் பெற உதவினார்.



சிவபெருமான் வாசுகி பாம்பின் விஷத்தை அருந்தியதால் நீலகண்டன் என்று பெயர் பெற்றார். விஷ்ணு பகவான் இக்கோயிலில் கர்ச்சபேஸ்வரர் ஆக சிவனை வழிபட்டார். இக்கோயிலில் சரஸ்வதியும் வழிபட்டதாக சொல்லப்படுகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழில் இயற்றப்பட்ட தண்டியலங்காரம் என்ற இலக்கண நூலில் இந்த கோவில் பற்றி பாடப்பட்டுள்ளது.ஆமை வடிவில் இருந்த சிவன் வழிபட்டதால் இந்த தலத்திற்கு, கச்சப்பேஸ்வரர் தலம் என பெயர் பெற்றது.



இங்குள்ள சிவலிங்கம் ஆமை ( கூர்மம் ), தாமரை ( பத்மம் ), நாகம் , யுகங்கள் ,சிம்மம் ஆகிய ஐந்து ஆசனங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற அமைப்பில் சிவன் காட்சி தருவது அரிதான ஒன்று. இத்திருக்கோயிலில் ஒரே இடத்தில் இரு சிவாலயங்கள் உள்ளன. ஒரே கோயில் வளாகத்திற்குள் இரண்டு சிவாலயங்கள் உள்ளடங்கிய பெருமையும் காஞ்சி கச்சபேசத்துக்கு உண்டு.



இந்த கோவிலில் மண்டை விளக்கு ஏற்றி திருக்கோவிலை சுற்றி வர தலைவலி, காதுவலி, காதில் சீழ்வடிதல், தலைக்குத்து போன்றவை நீங்கும் என்பது ஐதீகம். பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளைய தினம் நடைபெற உள்ளது. கச்சபேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளைய தினம் காஞ்சிபுரத்தில் நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவு பிறப்பித்துள்ளார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்ததால் அப்பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.