பெரிய பிளானிங் இருக்கு பின்னாடி! தேசிய அளவில் தமிழ்நாடு பற்றி பரப்பப்பட்ட செய்தி.. இதுதான் பின்னணி?

 சென்னை; நேற்று தமிழ்நாட்டில் ராமர் கோவில்களில் பூஜை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதாக பொய்யான செய்திகள் பரவின. இந்த பொய்யான செய்திகளுக்கு பின் என்ன நடந்தது? பாஜகவின் மாஸ்டர் பிளான் என்ன என்று திமுக தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

அயோத்தி ராமர் கோவில் விழா இன்று அயோத்தியில் விமர்சையாக நடக்கிறது. அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை இன்று பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில்தான் நேற்று தமிழ்நாட்டில் ராமர் கோவில்களில் பூஜை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதாக பொய்யான செய்திகள் பரவின.


நிர்மலா சீதாராமன்; கோவிலில் சிறப்பு பூஜைகளை நடத்த விடாமல் அரசு தடுப்பதாக பாஜக விமர்சனம் வைத்தது. அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்த புகாரில், 22 ஜனவரி அன்று நடைபெறும் அயோத்தி ராமர் மந்திர் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. HR&CE நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை.

தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன், என்று கூறியுள்ளார். சேகர் பாபு: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில், நாளை ராமர் பெயரில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என பரப்பப்படும் வதந்திக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மறுப்பு வெளியிட்டார். அதில் ஒன்றிய அமைச்சர் என்ன கடவுளா? என்ன ஆதாரத்துடன் இத்தகைய தகவலை பரப்புகிறார்.

அதில், சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.

முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது!, என்று கூறி இருந்தார். இந்த விவகாரம் நேற்று நாள் முழுக்க தேசிய அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக தரப்பு: இந்த மொத்த சம்பவம் குறித்து திமுக தரப்பில் விசாரித்ததற்கு.. ஆளும் திமுக அரசு மீது அபாண்டமாக பழி சுமத்தும் விதமாக இப்படி பொய்யை பரப்புகிறார்கள். இது பொய் என்று அவர்களுக்கு தெரியும். அப்படி தெரிந்தும் கூட அதை பரப்புவதே கோபம் தருகிறது.

இப்படி அரசியல் செய்து தமிழ்நாட்டில் இடம் பிடிக்க முடியாது. ஆனால் அவர்களின் நோக்கமும் அது இல்லை. தமிழ்நாட்டில் இப்படி நடக்கிறது என்று வடமாநிலங்களில் சொல்லி.. இந்திய கூட்டணி பற்றிய இமேஜை கெடுப்பார்கள். இங்கே நடக்காத விஷயங்களை நடப்பதாக பொய்யாக வடமாநிலங்களில் பரப்பி.. அங்கே வெற்றிபெற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். தமிழ்நாடு vs வடக்கு என்ற அரசியலை அவர்கள் முன்னிருத்துகிறார்கள்.. அவர்களின் இந்த செயல்களுக்கு பின் பெரிய பிளானிங் இருப்பதாகவே தோன்றுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க இது இன்னும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது என்கின்றனர் திமுக வட்டாரத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.